Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மேடையில் வைத்து பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வைத்த 7 கோரிக்கைகள்!

மேடையில் வைத்து பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வைத்த 7 கோரிக்கைகள்!

சமூகநீதியுடன் ஊழல் இல்லாத வெளிப்படையான ஆட்சி என்பதை நோக்கி பயணித்து வருகிறோம்.

பகிரவும் WhatsApp Facebook

மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்று முதல்வர் விஜய் கூறினார். சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசியதாவது: தமிழகத்தில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களைத் திறந்துவைத்த, அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி.

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழைத் தாய்மொழியாக கொண்ட மக்கள் வாழும் இம்மாநிலம், சிறப்பான வரலாறு, இலக்கியம், கலை, கட்டிடக் கலை, பண்பாடு, மரபுகளால் தனித்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தின் அரசியல் நிலப்பரப்பை மாற்றி, புதிய அரசியல் பயணத்தை தொடங்கி, வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்துள்ளோம். சமூகநீதியுடன் ஊழல் இல்லாத வெளிப்படையான ஆட்சி என்பதை நோக்கி பயணித்து வருகிறோம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயரிய தத்துவத்தின் அடிப்படையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இலக்காக கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. கல்வி, சுகாதாரம், வேளாண் வளர்ச்சி, மீனவர் நலன் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டுள்ளோம்.
அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தொழில் , அறிவியல், கலை இலக்கியம், சமூகநீதியில் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பங்களித்து வரும் மாநிலம் தமிழகம். வலிமையான மாநிலங்கள், வலிமையான இந்தியாவை உருவாக்கும்.
தமிழகம் எப்போதும் இந்தியாவின் சமூக, பொருளாதார, கலாச்சார வளர்ச்சிக்கு அடிப்படையாகத் திகழ்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும்போது, அவற்றின் பலன் மக்களின் வாழ்க்கையில் நேரடியாக பிரதிபலிக்க வேண்டும் என்பதை நமது அணுகுமுறை. எனவே, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்.
2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி முன்னேறுகிறோம். இந்த வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசெல்ல புத்தாக்கம், முதலீடு, உட்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அதேநேரம், தற்போதைய திட்டங்கள், அடுத்த தலைமுறைக்கான முதலீடுகளாக அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


பிரதமரிடம் விஜய் வைத்த 7 கோரிக்கைகள்

1. 65 கி.மீ. நீளம் கொண்ட 3-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு (விமான நிலையம் - கிளாம்பாக்கம், பூந்தமல்லி சுங்குவார்சத்திரம்,கோயம்பேடு - பட்டாபிராம்) ஒப்புதல் அளிக்க வேண்டும்

2. எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

3.மாநிலங்களுக்கு இடையே ஒசூர் - கர்நாடகாவின் பொம்மசந்திரா மெட்ரோ திட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும்.
மத்திய பட்ஜெட்டில் சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - ஹைதராபாத் இடையே புதிய அதிவேக ரயில் வழித்தடங்களை அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி. மேலும், முன்னுரிமை அடிப்படையில் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

4. செங்கல்பட்டு - திருச்சி, திருச்சி பஞ்சப்பூர் - கரூர் ஜெயபுரம்), கரூர்-கோவை, மாதவரம்- சோழவரம் நெடுஞ்சாலைகளை ஆறுவழிச் சாலையாக உயர்த்த வேண்டும்.

5. கோதாவரி - காவிரி திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்.

6. சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்.

7. எவ்வித நிபந்தனையுமின்றி, சர்வ சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.5,110 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

முந்தைய செய்தி
சைலண்ட் மோடில் பாமக; புதிய வியூகத்தில் தவெக - அதிர்ச்சியில் விசிக
அடுத்த செய்தி
தர்பூசணி, முலாம் பழம் நுகர்வு அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்